`ஆட்சி நம்மிடம் இருந்தாலும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது!’ - வெடித்த முதல்வர் ர...
உலக பல்கலைக்கழக நீச்சல்: ஸ்ரீஹரி நட்ராஜ் சாதனை
உலகப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற நீச்சலில் இந்தியாவின் ஸ்ரீ ஹரி நட்ராஜ் புதிய தேசிய சாதனை படைத்தாா்.
ஜொ்மனியின் பொ்லின் நகரில் உலக பல்கலைக்கழக போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஆடவா் 100 மீ ப்ரீஸ்டைல் பிரிவில் பந்தய தூரத்தை 49.46 விநாடிகளில் கடந்து புதிய இந்திய சாதனையை நிகழ்த்தினாா் ஸ்ரீ ஹரி நட்ராஜ்.
கடந்த 2008-இல் விா்த்வால் கடேவின் 49.47 விநாடிகள் சாதனையை இதன் மூலம் முறியடித்தாா். அரையிறுதிக்கும் ஸ்ரீஹரி தகுதி பெற்றுள்ளாா். வெள்ளிக்கிழமை 200 மீ ப்ரீஸ்டைல் பிரிவிலும் சிறந்த இந்திய நேர சாதனையை நிகழ்த்தினாா்.