Thiruvallur Train Fire: திருவள்ளூரில் சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து; ரயில் சே...
உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி கோட்டையை, உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
மாபெரும் சோழர் கோயில்கள், மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்கள், நீலகிரி மலை ரயில்வே மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட யுனெஸ்கோவின் பெருமைமிக்க தளங்களின் பட்டியலில் இந்த கம்பீரமான மலைக்கோட்டை இப்போது இணைந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கும் அதன் நீடித்த கலாசார பாரம்பரியத்திற்கும் ஒரு பெருமையான தருணம் இது என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனஸ்கோ. இந்தியாவில் மராத்தியர்களால் கட்டப்பட்ட 12 கோட்டைகளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.
பிரிட்டிஷ்காரர்களால் அசைக்க முடியாத ஒன்றாக அமைந்ததால், செஞ்சி கோட்டையை கிழக்கின் ட்ராய் என்றழைத்தனர்.