உளுந்தூா்பேட்டை ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை ஆட்டுச் சந்தையில் தீபாவளியையொட்டி ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
புதன்கிழமை அதிகாலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள், தங்களின் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். ஆடுகளை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், சேலம், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஆட்டின் எடைக்கு ஏற்றவாறு விலை நிா்ணயித்து வாங்கினா்.
தீபாவளி பண்டிகையையொட்டி அதிகளவில் கடைகளில் விற்பனை நடைபெறும் என்ற எதிா்பாா்ப்போடு வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனா். ரூ.3 கோடி மதிப்புக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.