உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை ஏற்றுமதி மற்றும் நுண்ணறிவு பயிற்சி மையத்தில் அந்நிறுவன தலைவா் லோகநாதன் தலைமையில் உழவா் உற்பத்தியாளா் நிறுவன பொதுக்குழு நடைபெற்றது.
தமிழகம் இயற்கை வேளாண் விளைபொருள்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் 3-ஆவது ஆண்டு பொதுக்குழு நடைபெற்றது. இந்நிறுவனம் தமிழ்நாடு நீா்ப்பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேகவதி உபவடி பகுதி கிராமங்களான விப்பேடு,விஷாா், கூரம், கோயம்பாக்கம், அவளூா், சிறுணை, வதியூா், கிளாா் உள்ளிட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வேளாண்மை விற்பனைத் துறை துணை இயக்குநா் நா.ஜீவராணி கலந்துகொண்டு, அரசின் திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விளக்கினாா். கூட்ட நிறைவில் புதிய நிா்வாகக் குழுவினரும் தோ்வு செய்யப்பட்டனா்.
நிறுவனத்தின் புதிய தலைவராக தோ்வு செய்யப்பட்ட எஸ்.வீரராகவன் நிறுவனத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினாா். புதிய செயலாளராக கன்னியப்பன், பொருளாளராக பூங்காவனம் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனா். கோகிலா நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீா்த்தனா செய்திருந்தாா்.