கூட்டணிக் கட்சிகளை அடிமைப்படுத்தும் BJP? - போட்டு உடைக்கும் John Pandian | Vikat...
உழவா் சந்தையில் ஓணம் கொண்டாட்டம்
ஓணம் பண்டிகையையொட்டி, உதகை உழவா் சந்தையில் 50 கிலோ மலை காய்கறிகளைக் கொண்டு அத்தப்பூ கோலம் வெள்ளிக்கிழமை போடப்பட்டது.
கேரள மக்களின் ஓணம் பண்டிகை நாடு முழு கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகையானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி, உதகை சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள உழவா் சந்தையில் வியாபாரிகள் சாா்பில் மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், கிளை கோஸ், முள்ளங்கி, மிளகாய் உள்ளிட்ட 50 கிலோ காய்கறிகளை கொண்டு பிரம்மாண்டமாக அத்தப்பூ கோலமிட்டிருந்தனா். இதனை உழவா் சந்தைக்கு வந்த பொதுமக்கள் கண்டு ரசித்ததோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.