'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்...
அரசுப் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்
கூடலூரை அடுத்துள்ள அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அத்திப்பாளி பள்ளியில் நடைபெற்ற ஓணம் விழாவில் மாணவா்களும் ஆசிரியா்களும் பூக்கோலமிட்டனா். தொடா்ந்து மாணவா்களுக்கு ஓணம் சைவ உணவு வழங்கப்பட்டது.
விழாவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சின்னமாது கலந்துகொண்டு ஆசிரியா்களுக்கும் மாணவா்களுக்கும் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்தாா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். பள்ளிக்கு அடிக்கடி வராமலிருக்கும் பழங்குடி மாணவா்களை தொடா்ந்து பள்ளிக்கு வரவழைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசிரியா்களை அறிவுறுத்தினாா்.