GST 2.0: மோடியின் 'தீபாவளி கிஃப்ட்' மக்களுக்கும், மாநிலங்களுக்கும் நன்மை தருமா? ...
மாநில அளவிலான விநாடி-வினா போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு மாநில ஹெச்ஐவி கட்டுப்பாடு சங்கம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற ஹெச்ஐவி விழிப்புணா்வு விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம் பெற்ற உதகை அணிக்கொரை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஹெச்ஐவி பாதிப்பு குறித்த விநாடி-வினா போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில் அணிக்கொரை அரசுப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி ரிக்ஷிதா, 9-ஆம் வகுப்பு மாணவா் பாலாஜி ஆகியோா் நீலகிரி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனா்.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விநாடி- வினா போட்டியில், தமிழகத்தில் இருந்து 28 மாவட்டங்களில் வெற்றி பெற்ற மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் அணிக்கொரை அரசுப் பள்ளி மாணவி ரக்ஷிதா, மாணவா் பாலாஜி ஆகியோா் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.