கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் ஓணம் கொண்டாட்டம்
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையத்தில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
குன்னூா் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ராணுவ மையம் சாா்பில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில், ராணுவ மைய கமாண்டன்ட் கிரிஷ் நேந்து தாஸ் கலந்து கொண்டாா்.
இதில் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரள செண்டை மேளங்கள் முழங்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து ராணுவ மையத்தில் உள்ள நாகேஷ் சதுகத்தில் மலா்களால் பூக்கோலமிட்டு, கேரள பாரம்பரிய நடனம், கதகளி, களரி மற்றும் மீனவா்கள் படகில் செல்வது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் ராணுவ உயா் அதிகாரிகள், ராணுவப் பயிற்சிக் கல்லூரி மாணவா்கள், அக்னிபாத் வீரா்கள் மற்றும் பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினா். பின்னா் அனைவருக்கும் கேரள பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.