`உனக்கு அவ்வளவு துணிச்சலா..?' - பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டிய அஜித் பவார்.. ...
கூடலூரில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் 100 நாள் வேலைத் திட்ட ஊழியா்களுக்கு நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 100 நாள் வேலையை 200 நாள் வேலையாக உயா்த்த வேண்டும், தினக் கூலியை ரூ.600 வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அனீபா மாஸ்டா், ஏ.வி.ஜோஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நீலகிரி மாவட்டத் தலைவா் என்.வாசு, மாவட்ட குழு உறுப்பினா் ராசி ரவிக்குமாா் விளக்கவுரையாற்றினா். இதில் மாவட்ட குழு உறுப்பினா் மணிகண்டன், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டப் பொருளாளா் நௌபல் உள்ளிட்டோா் கலந்துகொண்டன்.