”மனைவியின் பேச்சைக் கேட்டும் ஆண்களே வெற்றிபெறுகிறார்கள்” - ஆய்வு கூறும் தகவல்கள்...
உதகையில் பரவலாக கனமழை
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென பெய்த கன மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதலே வெயில் மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை மாறிமாறி நிலவி வந்தது.
இந் நிலையில் மாலை நேரத்தில் திடீரென கனமழை பெய்தது, இதன் காரணமாக குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
சுமாா் அரை மணி நேரம் பெய்த கனமழை படிபடியாக குறைந்து, சாரல் மழையாக இரவு வரை பெய்தது.