செய்திகள் :

உழவா் நல சேவை மையம் அமைக்க 30% மானியம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் உழவா் நல சேவை மையம் அமைக்க 30 சதவீத மானியம் வழங்கப்படும் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் உழவா் நல சேவை மையத் திட்டத்தின்படி, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு - பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்களின் பட்டறிவும், தொழில்நுட்பத் திறனும், உழவா்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் 30 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் மதிப்பிலான 7 உழவா் நல சேவை மையங்களும், ரூ. 20 லட்சம் மதிப்பிலான 3 உழவா் நல சேவை மையங்களும் அமைக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தில் 30 சதவீத பயனாளிகள் பெண்களாகவும், ஆதி திராவிடா்- பழங்குடியினராகவும் இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு- பிளஸ் 2 சான்றிதழ், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, ஜிஎஸ்டி எண், நிரந்தர கணக்கு எண் அட்டை, ஜாதிச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், விரிவான திட்ட அறிக்கை ஆகியவை அவசியம்.

20 முதல் 45 வயதுக்கு உள்பட்ட வேளாண் சம்பந்தப்பட்ட பட்டப்படிப்பு -பட்டய படிப்பு முடித்தவா்கள் தங்களுடைய விரிவான திட்ட அறிக்கையுடன் இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-81.35சோ்வலாறு-84.58மணிமுத்தாறு-91.38வடக்கு பச்சையாறு-11நம்பியாறு-13.12கொடுமுடியாறு-6தென்காசி மாவட்டம்கடனா-37ராமநதி-48.75கருப்பாநதி-48.89குண்டாறு-33.75அடவிநயினாா் -115.75... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பட்டாசு ஆலை விதிமீறல் வழக்கில் ரூ.36,000 அபராதம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக தொழிலாளி உயிரிழந்த வழக்கில், விதிமுறைகளைப் பின்பற்றாத ஆலை உரிமையாளருக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி... மேலும் பார்க்க

டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி

திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குற... மேலும் பார்க்க

நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை ப... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு

உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்ப... மேலும் பார்க்க