Saif Ali Khan: நீதிமன்ற உத்தரவால் சிக்கல்; ரூ.15,000 கோடி சொத்தை இழக்கும் சைஃப் ...
உழைப்புக்கு அன்பு கிடைக்குமா? விடியோ வெளியிட்ட முத்துக்குமரன்
பிக் பாஸ் சீசன் 8 வெற்றிக்கோப்பையை கைப்பற்றிய பிறகு முத்துக்குமரன் முதல்முறையாக விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஜன. 19 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 6 முதல் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சி, 100 நாள்களைக் கடந்து 106 நாள்களுக்கு ஒளிபரப்பானது.
மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு முத்துக்குமரன் முதல்முறையாக விடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் முத்துக்குமரன் பேசியதாவது, ''நன்றி மறப்பது நன்றன்று. இது காணொளிக்காக அல்ல. காலத்துக்குமானது. காலத்துக்குமன என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லோரும் சேர்ந்து இதை (பிக் பாஸ் கோப்பை) என் கைகளில் கொடுத்துள்ளீர்கள். அவ்வளவு கனமாக உள்ளது. அவ்வளவும் அன்பு.
உங்களுக்கு வெளியே பெரிய ஆதரவு உள்ளது என பிக் பாஸ் வீட்டில் சில நண்பர்கள் கூறினார்கள். ஆனால், வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிகிறது, மக்கள் காட்டும் அவ்வளவு அன்பும் எனக்காகவா? என்று வியப்பாக உள்ளது.
என் உழைப்புக்கு கிடைத்த வரவேற்பால் வியப்பில் மூழ்கியுள்ளேன். பிக் பாஸ் வீட்டில் வெற்றிக் கோப்பையை காண்பித்து அதனிடம் என்ன கூற விரும்புகிறீர்கள் எனக் கேட்டார்கள். அப்போது பேசியதைத்தான் இப்போதும் கூறுகிறேன். அதுதான் நான் நன்றி செலுத்தும் விதமாகவும் இருக்கும்.
மக்களின் அன்பும் அங்கீகாரமுமான கோப்பை என்னுடைய நேர்மையால், உண்மையால் காப்பாற்றிக்கொள்வேன். நெஞ்சம் நிறைந்த நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முத்துக்குமரன் வெளியிட்ட விடியோவில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எந்தப் பின்னணியும் இல்லாமல் பிரபலங்களுடன் மோதி இந்தக் கோப்பையை முத்துக்குமரன் வென்றுள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | சின்ன திரை நடிகரை மணந்த லப்பர் பந்து பட நடிகை!