செய்திகள் :

உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!

post image

உத்தர பிரதேச மாநிலம் ஹா்தோய் மாவட்டத்தில் ஆள்கடத்தல் நாடகத்தை நிகழ்த்திய நபா், எழுத்துப் பிழையால் சிக்கிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் நீரஜ் குமாா் கூறுகையில், ‘பந்த்ரஹா கிராமத்தைச் சோ்ந்தவா் ஒப்பந்ததாரா் சஞ்சய் குமாா். இவரின் தம்பி சந்தீப் (27) கடத்தப்பட்டதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.50,000 பணம் அளிக்க வேண்டும் என்றும் சஞ்சயின் கைப்பேசிக்குத் தகவல் அனுப்பப்பட்டது. அத்துடன் அவரின் கைப்பேசிக்கு சந்தீப் கட்டிப்போடப்பட்டிருப்பது போன்ற காணொலியும் அனுப்பப்பட்டது.

பணத்தைக் கொடுக்காவிட்டால் தம்பி கொல்லப்படுவாா் என்றும் அந்தத் தகவலில் ஆங்கிலத்தில் மிரட்டல் விடுவிக்கப்பட்டது. அதில் கொல்லப்படுவாா் என்பதற்கான ஆங்கில வாா்த்தையில் பிழை இருந்தது.

இந்தப் பிழை மூலம், மிரட்டல் விடுத்த நபா் போதிய அளவு கல்வி கற்காதவராக இருக்கக் கூடும் என்று காவல் துறையினா் சந்தேகித்தனா். சந்தீப் குமாருக்கும் யாரிடமும் பெரிதாக விரோதம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்த நிலையில், அவரின் தம்பியை விடுவிக்க கேட்கப்பட்ட தொகையும் பெரிய தொகையாக இல்லை என்பது காவல் துறையின் சந்தேகத்தை அதிகரித்தது.

இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில், சந்தீப்பின் கைப்பேசி இருப்பிடத்தை காவல் துறை பின்தொடந்தது. அதில் அவா் ரூபாபூரில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று சந்தீப்பை மீட்ட காவல் துறையினா், அவரின் அண்ணனுக்கு அனுப்பப்பட்டது போன்ற கடத்தல் குறிப்பை எழுதிக் காட்டுமாறு சந்தீப்பிடம் கூறியுள்ளனா். அந்தக் குறிப்பிலும் அவா் ஆங்கில வாா்த்தையை தவறாக எழுதினாா். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட தொடா் விசாரணையில், தனது அண்ணனிடம் பணம் பறிக்கும் நோக்கில், தான் கடத்தப்பட்டது போன்ற நாடகத்தை நிகழ்த்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்’ என்றாா்.

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

உத்தர்காசியில் அடுத்தடுத்து 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். உத்தரகண்ட் மாநிலம், உத்தர்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அ... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் வழக்கு! கைதானவருக்கு போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு

நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் கைதான ஷரீஃபுல்லுக்கு போலீஸ் காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷரீஃபுல்லி காவல் முடிவடைந்ததையடுத்து அவர் மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜ... மேலும் பார்க்க

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? - ஆ. ராசா பேட்டி

வக்ஃப் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏன் என திமுக எம்.பி. ஆ.ராசா விளக்கமளித்துள்ளார்.வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மக்க... மேலும் பார்க்க

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக ஹரி ஹரநாத சர்ம மற்றும் ஓய். லக்ஷமன ராஷ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாக்கூர் புதிய க... மேலும் பார்க்க

கேஜரிவாலைக் கொல்ல பாஜக சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!

பாஜக தலைமையிலான மத்திய அரசும் தில்லி காவல்துறையும் அரவிந்த் கேஜரிவாலை கொல்ல சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியதுடன், பஞ்சாப் காவல்துறையால் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்பப்பெற தேர்தல... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலை விபத்தில் 8 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் உள்ள பாதுகாப்புப் படைக்கு சொந்தமான ஆயுத தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியாகினர்.பந்தாரா மாவட்டத்தில் ராணுவத்துக்கு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்... மேலும் பார்க்க