செய்திகள் :

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும் கார்த்தி சிதம்பரம்

post image

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வேலைகளும் உருவாகின்றன.

தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மொழி சர்ச்சையை கிளப்புகிறவர்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களை அடையலாம். ஆனால், அவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்" என்று பேசியிருந்தார்.

'நான் முழு நேர அரசியல்வாதி அல்ல!' - யோகி ஆதித்யநாத்
'நான் முழு நேர அரசியல்வாதி அல்ல!' - யோகி ஆதித்யநாத்

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், "உத்தரப்பிரதேச பள்ளிக்கூடங்களில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுகொள்கின்றனர்? இந்த தரவுகளை உத்தரப்பிரதேச அரசால் கொடுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ் கற்றுக்கொண்டு இங்கு வருவதில்லை. இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது இந்தித் திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்து வருகின்றது என்பதும், இதற்கு முன்பும், தமிழ்நாட்டின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பை விமர்சித்து யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர்: 'பிரச்னையை விவாதிக்க நடுராத்திரி 2 மணியா?' - மக்களவையில் கனிமொழி அடுக்கிய கேள்விகள்

2023-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை, மணிப்பூரில் கலவரங்கள் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், இன்னமும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆளும் பாஜக அரசு என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது... அத்தனை கலவரங்களும... மேலும் பார்க்க

'திருக்குறளும், இந்தி பாடலும்' நிர்மலா சீதாராமன் Vs திருச்சி சிவா - மாநிலங்களவையில் சுவாரஸ்ய விவாதம்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை எதிர்ப்பு குறித்த கடுமையான விவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் திமுக எம்... மேலும் பார்க்க

தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் நயினார் நாகேந்திரன்? - உச்ச கட்டத்தில் கமலாலய பாலிடிக்ஸ்

கடந்த 2021-ம் ஆண்டு தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். முன்னதாக, அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த பா.ஜ.க-வுக்கு நான்கு இடங்கள் கிடை... மேலும் பார்க்க

`கூட்டாட்சி தத்துவத்தின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல்...' - பிரகாஷ் காரத்

``தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மூலம் 2026 க்கு பிறகு தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் பெரும் சமநிலையின்மை ஏற்படும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் கா... மேலும் பார்க்க

`மாநில அரசு, மத்திய அரசின் விளம்பர தூதர்கள்போல செயல்பட இயலாது' - மதுரையில் பினராயி விஜயன் பேச்சு

"கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை அதிகரித்து வருவது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.." என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன்மதுரையில... மேலும் பார்க்க