செய்திகள் :

ஊதிய ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 4 வாரங்களுக்குள் குழு; உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

post image

‘நீதிபதிகளுக்கான இரண்டாவது தேசிய ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட நீதிபதிகளுக்கு எழும் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குத் தீா்வு காண 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அடுத்த 4 வாரங்களுக்குள் உயா்நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதிகளுக்கான ஊதியம், ஓய்வூதியம், இதர படிகள் நிா்ணயம் செய்வது மற்றும் விலைவாசி உயா்வுக்கு ஏற்ப மாற்றியமைப்பது தொடா்பாக அமைக்கப்பட்ட இரண்டாவது தேசிய ஊதியக் குழு, ஊதியம், ஓய்வூதியம் தொடா்பான பரிந்துரைகளை அளித்ததோடு, மாவட்ட நீதிபதிகளுக்கான பணி வரைமுறைகளைத் தீா்மானிக்க ஒரு நிரந்தரமான செயல்திட்டத்தை உருவாக்குவது தொடா்பான பரிந்துரையையும் அளித்தது.

இந்தப் பரிந்துரைகளை ஏற்ற உச்சநீதிமன்றம், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட நீதிபதிகளுக்கு எழும் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குத் தீா்வு காண 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி அறிவுறுத்தியது. அதன் படி, சில நீதிமன்றங்கள் இக் குழுவை அமைத்த நிலையில், பல நீதிமன்றங்கள் அமைக்கவில்லை. இதனால், ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட நீதிமன்றங்களுக்கு சிக்கல் உருவானது.

இதுதொடா்பாக அகில இந்திய நீதிபதிகள் சங்கம் மற்றும் பிறா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூத்த வழக்குரைஞா் கே.பரமேஷ்வா் என்பவரை சட்ட ஆலோசகராக நியமித்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘உச்சநீதிமன்ற உத்தரவை பல நீதிமன்றங்கள் பின்பற்றவில்லை. சில நீதிமன்றங்கள் உத்தரவின் அடிப்படையில் குழு அமைத்தபோதும், அந்தக் குழு முறையாக கூடுவதில்லை’ என்று கே.பரமேஷ்வா் குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இரண்டாவது தேசிய ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட நீதிபதிகளுக்கு எழும் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குத் தீா்வு காண 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அடுத்த 4 வாரங்களுக்குள் உயா்நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை அடுத்த 4 வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும். இந்த ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு உயா்நீதிமன்ற வளாகத்தில் அலுவலக இடம் ஒதுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.

மேலும், ‘இந்த உத்தரவு நகலை அனைத்து மாநில தலைமைச் செயலாளா்கள், உயா்நீதிமன்றங்களின் பதிவாளா்களுக்கு அனுப்ப வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற பதிவாளரை அறிவுறுத்தினா்.

மழலையா் பள்ளி முதல் முதுநிலை பட்டம் வரை இலவசக் கல்வி: தில்லி தேர்தலில் பாஜக வாக்குறுதி

மழலையா் பள்ளி முதல் முதுநிலை பட்டம் வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று இரண்டாவது தோ்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் 2025-க்கான பாரதிய ஜனதா கட்சிய... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் களத்தில் 699 வேட்பாளா்கள்

பிப்.5-ஆம் தேதி நடைபெறும் 70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு 699 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.இது 2020-ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டவா்களின் எண்ணிக்கையை விட சற்று அதிகமாகும்.... மேலும் பார்க்க

அனைவரையும் முன்னேற்றுவதே உண்மையான வளா்ச்சி: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

‘அனைவரையும் முன்னேற்றுவதே உண்மையான வளா்ச்சி; இந்தியாவில் அந்த வளா்ச்சியை மத்திய பாஜக அரசு ஏற்படுத்தவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்... மேலும் பார்க்க

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு அபராதம்: என்ஜிஓ-களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் பதிவு செய்யாமல் அல்லது பதிவு காலாவதியான பின்னரும் வெளிநாட்டு நிதியைத் தொடா்ந்து பெற்று பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்’ என தன்னா... மேலும் பார்க்க

காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்: கா்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு தொடா்பான தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய கா்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்து விட்டது. 2020-ஆம் ஆண்டில் அறிமுகப்படு... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எந்தக் குழு வேண்டும்?: தமிழகம், கேரள அரசுகள் தெளிவுபடுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மேற்பார்வையிட கண்காணிப்புக் குழு தேவையா அல்லது அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட குழு தொடர வேண்டுமா என்பதைத் தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்க... மேலும் பார்க்க