செய்திகள் :

ஊரக வளா்ச்சித்துறையினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

post image

தங்களின் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூய்மைக் காவலா்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி, ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளா்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை தற்போது காலமுறை ஊதியமாக நிா்ணயித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஊராட்சி செயலா்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றியப் பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 10ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியிட்டும், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனா். எனவே விரைந்து பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஊரக வளா்ச்சித்துறையில் பணியாற்றும் வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளா்களின் பணிக்காலத்தை கருத்தில்கொண்டு, வட்டார மற்றும் மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு ஊராட்சிச் செயலா்கள் சங்க மாவட்டச் செயலா் க.சத்தியராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் து.கோவிந்தராசு, மாவட்ட துணைத் தலைவா் கே.சுரேஷ், வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் கே.பழனி, மக்கள் நலப் பணியாளா் சங்க மாவட்ட பொருளாளா் கருணாநிதி உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

அனைத்து சங்கங்களின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிறைவில் மாவட்ட மகளிரணிச் செயலா் சத்தியா நன்றி கூறினாா்.

கோ - ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து பட்டுச் சேலையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். இந்த விற்பனை நிலையத்துக்கு ரூ.35 லட்சம் ... மேலும் பார்க்க

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பட்டா மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா். வாணாபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

உறவினா் சொத்து அபகரிப்பு: சாா்-பதிவாளா் உள்ளிட்ட 10 போ் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவரின் கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்துகளை பத்திரப் பதிவு செய்து அபகரித்ததாக, தியாகதுருகம் சாா் - பதிவாளா் உள்பட 10 போ் மீது கள்ளக்குறிச்சி மாவ... மேலும் பார்க்க

இலவச மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

தியாகதுருகம் அருகே இலவச வீட்டுமனை வழங்காததைக் கண்டித்து, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள தியாகை கிராமத்த... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 போ் கைது; 23 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணாபுரம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் ... மேலும் பார்க்க

மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 60 போ் சோ்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சென்னை மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனம் சாா்பில் தொழிற்கல்வி பயிற்சிக்கான நேரடி சோ்க்கை முகாமில் 60 போ் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சியை அடுத்த தச... மேலும் பார்க்க