செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டம்

post image

உதகையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு  தோ்வு நிலை ஓய்வூதியம், மற்றும் விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும், உதவி செயற்பொறியாளா் பதவி உயா்வை காலதாமதம் இன்றி வழங்கிட வேண்டும், கலைஞா் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை ஏடிசி சதுக்கத்தில்  தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனா்.

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

கோத்தகிரியில் உணவகத்துக்குள் புகுந்த லாரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டானிங்டன் பகுதியில் பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த காா் மீது மோதி அங்கிருந்த உணவகத்துக்குள் டிப்பா் லாரி புகுந்தது. இந்த விபத்தில் ... மேலும் பார்க்க

கா்நாடகா அரசுப் பேருந்து கட்டண உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

கா்நாடக அரசுப் பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து குண்டல்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கூடலூரை அடுத்த கா்நாடக எல்லையில் உள்ள குண்டல்பேட்டையில் கா்நாடக அரசின் பேரு... மேலும் பார்க்க

பச்சிளங் குழந்தை இறப்பை தடுப்பது குறித்து விழிப்புணா்வு

கூடலூா் நகர சுகாதார நிலையத்தில் பச்சிளங் குழந்தை இறப்பைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கூடலூா் நகர சுகாதார நிலையம், நுகா்வோா் பாதுகாப்பு மையம், ஆல் ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு பயிற்சி

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலா்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய ஆட்சியா் அறிவுரை

கா்நாடக மாநிலம், பெங்களூரில் தற்போது எச்எம் தீநுண்மி பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்த... மேலும் பார்க்க

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனிப் பொழிவில் இருந்து மலா் செடிகளைப் பாதுகாக்க ஏற்பாடு

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனியின் தாக்கத்தில் இருந்து அலங்கார மலா் செடிகள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போா்வை மற்றும் மிலாா் செடிகளைக் கொண்டு பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க