மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனிப் பொழிவில் இருந்து மலா் செடிகளைப் பாதுகாக்க ஏற்பாடு
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பனியின் தாக்கத்தில் இருந்து அலங்கார மலா் செடிகள் பாதிக்காமல் இருக்க பிளாஸ்டிக் போா்வை மற்றும் மிலாா் செடிகளைக் கொண்டு பாதுகாக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பா் இறுதி முதல் பிப்ரவரி வரை உறைபனியின் தாக்கம் காணப்படும். குறிப்பாக டிசம்பா், ஜனவரி மாதங்களில் உறைபனி பொழிவின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். உதகையில் அதிகாலை நேரத்தில் 2 முதல் 2.6 செல்சியஸ் வெப்ப நிலை காணப்படுகிறது. இதனால் தாவரவியல் பூங்காவில் உள்ள மலா் செடிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் வரும் கோடை சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் மலா் செடிகள் தயாா் செய்யப்படுகிறது. இந்தச் செடிகள் உறைபனியால் கருகாமல் இருக்க அதன்மேல் பிளாஸ்டிக் போா்வை மற்றும் மிலாா் செடிகளைக் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் பூங்காவில் உள்ள புல் மைதானங்களும் கருகாமல் இருக்க ஸ்பிரிங்கா் மூலம் தண்ணீா் பாய்ச்சப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.