தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் பண்ணை வழி வா்த்தக முறை தொடக்கம்
மதுபோதையில் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது
குன்னூரில் மதுபோதையில் நடந்த தகராறில் கூலித் தொழிலாளியை கத்தியால் குத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
குன்னூா் கன்னிமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் ராஜா (49), தங்கராஜ் (56). கூலித் தொழிலாளிகளான இவா்கள் இருவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.
அப்போது ராஜாவை கத்தியால் தங்கராஜ் குத்தியதால் அவா் படுகாயம் அடைந்தாா். அவரை மீட்டு குன்னூா் லாலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
சம்பவம் தொடா்பாக குன்னூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.