மாலத்தீவு பாதுகாப்பு மேம்பாட்டுக்கு ஆதரவு: இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் இந்தியா...
ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டம்
உதகையில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளா் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலா்களுக்கு சிறப்பு தோ்வு நிலை ஓய்வூதியம், மற்றும் விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும், உதவி செயற்பொறியாளா் பதவி உயா்வை காலதாமதம் இன்றி வழங்கிட வேண்டும், கலைஞா் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை ஏடிசி சதுக்கத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.