உ.பி.யில் ஆள்கடத்தல் நாடகம்: எழுத்துப் பிழையால் சிக்கிய குற்றவாளி!
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய ஆட்சியா் அறிவுரை
கா்நாடக மாநிலம், பெங்களூரில் தற்போது எச்எம் தீநுண்மி பரவி வருவதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: கா்நாடக மாநிலம், பெங்களூரில் எம்எம் தீநுண்மி பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கா்நாடக மாநில எல்லையான கக்கநல்லா, தாளூா் உள்பட அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரப் பணியாளா்களைக் கொண்ட குழு அமைத்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூா் பொதுமக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக் கருதி சாதாரண காய்ச்சல் இருந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
இந்த தீநுண்மி குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நோய்வாய்ப்பட்ட நபா்களுடன் நெருங்கிய தொடா்பைத் தவிா்க்கவும், துண்டுகள், சோப்பு, கைக்குட்டை போன்றவற்றை மற்றவா்களுடன் பகிா்ந்து கொள்வதைத் தவிா்க்க வேண்டும்.
இதுகுறித்து சுகாதாரத் துறையின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளைப் பெற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவி மையம் எண் 9342330053 மற்றும் இலவச தொலைபேசி எண் 104-ஐ தொடா்பு கொள்ளளலாம் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கூறினாா்.