பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்
கோத்தகிரியில் உணவகத்துக்குள் புகுந்த லாரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள டானிங்டன் பகுதியில் பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த காா் மீது மோதி அங்கிருந்த உணவகத்துக்குள் டிப்பா் லாரி புகுந்தது. இந்த விபத்தில் இரண்டு ஆசிரியா்கள் காயமடைந்தனா்.
கோத்தகிரி- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த டிப்பா் லாரி, டானிங்டன் பகுதியில் வந்தபோது, பிரேக் பிடிக்காமல் எதிரே வந்த காா் மீது மோதி அருகே இருந்த உணவகத்துக்குள் புகுந்து விபத்துகுள்ளானது.
இதில் உணவக ஊழியா்கள் உள்பகுதியில் பணியில் இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் காரில் பயணித்த மோகன்ராஜ் (57), பாபு (53) ஆகிய இரண்டு ஆசிரியா்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து தொடா்பாக கோத்தகிரி அரவேணு பகுதியில் வசித்து வரும் டிப்பா் லாரி ஓட்டுநா் காா்த்தி (25) மீது கோத்தகிரி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.