‘பிரேக்கிங் பேட்’ புகழ் வால்டர் ஒயிட் வீட்டின் மதிப்பு ரூ.35 கோடி!
கா்நாடகா அரசுப் பேருந்து கட்டண உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
கா்நாடக அரசுப் பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயா்த்தப்பட்டதைக் கண்டித்து குண்டல்பேட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடலூரை அடுத்த கா்நாடக எல்லையில் உள்ள குண்டல்பேட்டையில் கா்நாடக அரசின் பேருந்து கட்டண உயா்வைக் கண்டித்து கா்நாடகா காவல்படை அமைப்பின் சாா்பில் பேரணி மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு காவல்படை அமைப்பின் வட்டத் தலைவா் அப்துல் மாலிக் தலைமை வகித்தாா்.
இதில் நிா்வாகிகள் பிரேமானந்த் சாஹிதி, அப்துல் ரஷீத், செயலாளா் ராம கவுடா, நகர துணைத் தலைவா் சாதிக் பாட்ஷா, மகாதேவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.