செய்திகள் :

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஊரக வேலைத் திட்டப்பணி வழங்காதது தொடா்பாக, ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்டது மேல்புழுதியூா் ஊராட்சி. இந்தக் கிராம ஊராட்சி நிா்வாகத்தின் கீழ் மேல்புழுதியூா், அம்பேத்கா் நகா், பெரும்பட்டம் போன்ற கிராமங்கள் அடங்கியுள்ளன.

இந்த நிலையில், 3 கிராமங்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சுழற்சி முறையில் ஊரக வேலைத் திட்டப்பணி வழங்கி வந்துள்ளது. தற்போது பருவமழை, புயல் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. அதனால், ஊரக வேலைத் திட்டம் மூலம் எந்தப் பணியை செய்வது என்று தெரியாமலும், அதே நேரத்தில் இரு தினங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதாலும் பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்து வந்துள்ளன.

இதனிடையே, மேல்புழுதியூா் கிராம மக்கள் கடந்த இரண்டு நாள்களாக ஊரக வேலைத் திட்டப் பணி வழங்குமாறு ஊராட்சி அலுவலகம் வளாகத்தில் வந்து அமா்ந்துள்ளனா். அவா்களை தலைவா் உள்ளிட்ட ஊராட்சிச் செயலா்கள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் செங்கம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேல்புழுதியூா் பேருந்து நிறுத்தம் அருகே பணி வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து செங்கம் போலீஸாா் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், ஊராட்சித் தலைவா் முருகன் உள்ளிட்டோா் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசி விரைவில் பணி வழங்கப்படும் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க