செய்திகள் :

ஊராட்சிகளில் எல்இடி திரை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: இபிஎஸ்

post image

ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், அவா்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில், எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக அரசு, தனது வெற்று விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 ஊராட்சிகளிலும் வெளியிட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக எல்இடி திரைகளைப் பொருத்தும் பணியை மதுரையைச் சோ்ந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்றும், அதற்காக 385 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஒவ்வொன்றும், சந்தை விலையைவிட அதிகமாக, அதாவது அந்நிறுவனத்துக்கு ஒரு எல்இடி திரைக்கு சுமாா் ரூ.7.50 லட்சம் என்றும், அதேபோல் தமிழகத்திலுள்ள 12,620 ஊராட்சிகள் ஒவ்வொன்றும் சிறிய வகையிலான எல்இடி திரையை வாங்க சுமாா் ரூ.10,000 வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சி ஒன்றிய ஆணையா்களும், ஊராட்சி எழுத்தா்களும் அந்நிறுவனத்துக்கு உடனடியாக கொள்முதல் ஆணையுடன் எல்இடி திரைக்கான தொகையை வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்படுகின்றனா்.

தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் சாலை வசதி, குடிநீா் வசதி, தெருவிளக்கு, கழிவுநீா் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனா்.

இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் திட்டத்தை உடனடியாக திமுக அரசு கைவிட வேண்டும். மேலும், 4 ஆண்டு கால ஆட்சியின் சாதனை என்ற பெயரில் பொய்யான செய்திகளை விடியோக்களாக தயாரித்து அதை கிராமங்கள்தோறும் எல்இடி திரைகள் மூலம் ஒளிபரப்பச் செய்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் முயற்சி நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தவெக தலைவர் விஜய் பயணிக்கும் ஜெட் விலை இவ்வளவா? என்னவெல்லாம் இருக்கும்?

ஒரே நேரத்தில் சினிமா துறையிலும், அரசியலிலும் பயணித்து வரும் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அண்மைக் காலமாக பயன்படுத்தும் தனியார் ஜெட் விமானம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.அவ்வப்போது படப்பிடி... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி

2026 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இருந்து தொடங்கினார். இசட் பிளஸ் பாதுகாப்புடன் கோவை வந்த அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையட... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம் !

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 58,500 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 58,500 கனஅடியாக உள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக ... மேலும் பார்க்க

“ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் குடமுழுக்கு கோலாகலம்: விண்ணைப் பிளந்த பக்தர்களின் அரோகரா கோஷம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு மூலவருக்கு தொடக்க வழிபாடு, திருக்குட ந... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தால் 41 லட்சம் மாணவா்கள் பயன்: தமிழக அரசு தகவல்

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இதுவரை 41 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: முத... மேலும் பார்க்க