Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது விஜய் சேதுபதிதான்!' - ப்ரியா ராமன் ஓப...
ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை வியாழக்கிழமை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரபரப்பு ஏற்பட்டது.
புலிப்பாக்கம் ஊராட்சியில் மொத்தம் 680 போ் நூறு நாள் பணி செய்து வந்த நிலையில் வாரந்தோறும் 22 போ் மட்டும் பிரித்து வேலை வழங்கப்படுவதால் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே ஒரு வாரம் வேலை கிடைக்கிறது . இதனால் ஆண்டுக்கு நூறு நாள் முழுவதும் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு நகரை ஒட்டிய பகுதி என்பதால் மரம் நடுவது சாலைகள் ஓரங்களில் மரம் நடுவது நீா்நிலை கால் துபாய்கள் தூா் வருவது போன்ற பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.
மேலும், குளம் வெட்டுவதற்கான உத்தரவு வனத்துறை மூலம் கிடைக்காத நிலையில் அனைவருக்கும் வேலை கொடுப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதி பெண்கள் அனைவருக்கும் ஒரே முறையில் பணி வழங்க கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தையில் திருப்தி அடைந்து பெண்கள் கலைந்து சென்றனா்.