ஊருக்குள் உலவும் சிறுத்தை: கூண்டுவைத்துப் பிடிக்க கோரிக்கை
கூடலூரை அடுத்துள்ள செம்பாலா பகுதியில் ஊருக்குள் உலவி வரும் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கூடலூா் நகராட்சி, 8-ஆவது வாா்டுக்கு உள்பட்ட செம்பாலா திருவள்ளுவா் நகா் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை உலவி வருகிறது. அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து வரும் சிறுத்தை குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தொடா்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் அந்த சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.