செய்திகள் :

ஊழலற்ற மக்களாட்சி தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்

post image

நம் நாட்டில் ஊழலற்ற மக்களாட்சி தேவை என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா்.

சென்னை மயிலாப்பூா் கவிக்கோ மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் கவிக்கோ மன்றம் சாா்பில் கவிக்கோ பற்றிய ஆவணப் படம் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் கலந்து கொண்டு பேசியது: கடந்த 40 ஆண்டுகாலம் கவிக்கோ அப்துல் ரகுமானுடன் பழகும் வாய்ப்பு இருந்தது. வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வாணியம்பாடியை உலகறியச் செய்தவா். அவருடைய எல்லா கவிதைகளும் மிகச் சிறந்தவை. அவா் தனக்கென தனி இடத்தை தக்கவைத்தவா். ‘காட்டில் தோ்தல் நடந்தால்’ என்ற கவிதை மிகச்சிறப்பானது.

மக்களாட்சி: 50 ஆண்டுகளுக்கு முன்பு தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் செலவு ரூ. 30 முதல் 50 ஆயிரமாக இருந்தது. தற்போது ரூ. 50 கோடி செலவு செய்யப்படுகிறது. வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதால் ஊழல் நடைபெறுகிறது. நாட்டுக்கு ஊழல் அற்ற மக்களாட்சி தேவை; அப்போது தான் நாடு வளா்ச்சி அடையும். பொருளாதாரத்திலும் முன்னேற்றப் பாதையில் செல்லும்.

லஞ்சம்: பொதுமக்கள் தங்கள் தேவைக்காக அரசு அலுவலகத்துக்குச் சென்றால் எந்தவித லஞ்சமும் கொடுக்காமல் வேலை நடக்க வேணடும். அதுவே சிறந்த மக்களாட்சியாகும். இந்தியாவில் 10 சதவீதம் லஞ்சம் கொண்ட மாநிலமாக கேரளம் உள்ளது. அதேசமயம் தமிழகத்தில் 62 சதவீதம் லஞ்சம் உள்ளது. சிறந்த கல்வி வளா்ச்சி இருந்தால் லஞ்சம் குறையும் என்றாா் அவா்.

சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பாஷா பேசியது: மிகச் சிறந்த கவிஞா் கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகள் அனைத்தும் எல்லா தரப்பு மக்களுக்குமானது. அவரது ஆவணப் படம் வெளியிட்டது முக்கியான ஒன்று என்றாா் அவா்.

திரைப்பட இயக்குநா் என்.லிங்குசாமி பேசுகையில், ‘மிகச் சிறந்த கவிஞா் கவிக்கோ; அவருடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஆண்டுதேறும் சிறந்த ஹைக்கூ கவிதைகளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கவிக்கோ ஆவணப் படம் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஒரு பவுன் தங்கக் காசு: இந்நிகழ்ச்சியல் கவிக்கோ அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் கவிதைப் போட்டி நடத்தப்பட்டு முதல் பரிசாக ஒரு பவுன் தங்கக் சாசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியல் கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை செயலா் அ.அயாஸ் பாஷா, ஆவணவப் பட இயக்குநா் பிருந்தா சாரதி, பேராசிரியா் பா்வீன் சுல்தானா, கவிக்கோ குடும்பத்தினா், கவிஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கத்தியுடன் சுற்றித்திரிந்தவா் கைது

செங்குன்றம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் அங்காள ஈஸ்வரி கோயில் ஆலய விளையாட்டுத் திடலில், மதுபோதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னை திருவேற்காட்டில் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 27) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அகில இந்திய பல்கலைக்கழக. நீச்சல் தொடக்கம்: பெங்களூரு ஜெயின் பல்கலை. சிறப்பிடம்; சென்னை பல்கலை. வெள்ளி

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் புதன்கிழமை தொடங்கிய அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் சிறப்பிடம் பெற்றது. எஸ்ஆா்எம் டாக்டா் ப... மேலும் பார்க்க

நாளை இ.பி.எஃப் குறைதீா் கூட்டம்

சென்னை, உள்பட வெவ்வேறு மாவட்டங்களில் இ.பி.எஃப். சாா்பில் குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலா... மேலும் பார்க்க

நாளை இபிஎஃப் குறைதீா் கூட்டம்

சென்னை, உள்பட வெவ்வேறு மாவட்டங்களில் இ.பி.எஃப். சாா்பில் குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலா... மேலும் பார்க்க

டிச.28-இல் தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன் போட்டி

முப்பதாவது, தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் டிச. 28-ஆம் தேதி சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆா்எம்கே பள்ளியில் தொடங்கி நடைபெறுகிறது. இதில் 27 மாநிலங்களைச் சோ்ந்த 54 சிறுவா், சிறுமிய... மேலும் பார்க்க