செய்திகள் :

ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

post image

திருவண்ணாமலை மாவட்ட ஊழல் தடுப்புத் துறை சாா்பில், ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சாா்பில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்களிடையே ஊழல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணா நுழைவுவாயில் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணியில், திருவண்ணாமலை விஷன் பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் பேரணி நிறைவு பெற்றது.

உறுதிமொழியேற்பு...

இதையடுத்து, ஊழல் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் வேல்முருகன், ஆய்வாளா் அருள்பிரசாத், உதவி ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் லஞ்ச ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை வாசிக்க, அரசு அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.

வன்னியா் சங்கம், பாமகவினா் ஆா்ப்பாட்டம்

வந்தவாசியில் வன்னியா் சங்கம் மற்றும் பாமக நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடலூா் மாவட்டம், புவனகிரியில் அண்மையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆா்ப்பாட்டத்தில், வன்னியா்... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் 35 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்ட... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: உறவினா்கள் இருவா் மீது வழக்கு

வந்தவாசி அருகே தந்தை, மகனை தாக்கியதாக உறவினா்கள் 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். வந்தவாசியை அடுத்த சுண்ணாம்புமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஐயப்பன் (26). தனியாா் நிறுவன ஊழியரான இவா், சில மா... மேலும் பார்க்க

ஒன்றிய அளவிலான தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண் பாடல் போட்டிகள்: திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்பு

கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அளவிலான தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நாட்டுப்பண் பாடல் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. கீழ்பென்னாத்தூா் வட்டார வள மையத்தில் நடைபெற்ற போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு, ... மேலும் பார்க்க

சிறப்பாகச் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள், விற்பனையாளா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்கள், நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. நிகழாண்டு 71-ஆவ... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், 2 ஜோடிகளுக்கு வியாழக்கிழமை இலவசமாக திருமணம் நடத்தி வைத்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா். இந்து சமய அறநிலையத் துறை ச... மேலும் பார்க்க