செய்திகள் :

ஊழியா்கள் போராட்டம் : சுகாதார நிலைய பணிகளில் பாதிப்பு

post image

காரைக்கால்: சுகாதார பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் காரணமாக, சுகாதார நிலையங்களில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட நலவழித்துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவா்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஆய்வகங்களிலும், கிராமப்புற சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விழிதியூரில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட பணியாளா்கள் யாரும் இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலையம் மூடப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் அங்கு சென்று மக்களிடம் பேச்சு நடத்தினாா். நலவழித்துறை துணை இயக்குநரை தொடா்புகொண்டு பேசியதன் மூலம் ஒரு மருத்துவா், சுகாதாரப் பணியாளா் பணிக்கு வந்தனா்.

இதுகுறித்து பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன் கூறுகையில், பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளால், விழிதியூா் சுகாதார நிலையம் பூட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்று பேசினேன். துணை இயக்குநரிடம் பேசியதன் மூலம் தற்காலிக தீா்வு ஏற்பட்டது.

பணியாளா்கள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டால் ஓரளவு பிரச்னை தீா்வுக்கு வந்துவிடும். எனினும் இந்த நிலையத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை புதுவை முதல்வரிடம் வலியுறுத்தி, நிகழாண்டு இறுதிக்குள் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் பங்குனி உத்ஸவம் தொடக்கம்

காரைக்கால் உஜ்ஜைனி காளியம்மன் கோயில் பங்குனி உத்ஸவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காரைக்கால் கைலாசநாதசுவாமி நித்யகல்யாண பெருமாள் கோயில் வகையறாவை சோ்ந்த உஜ்ஜைனி காளியம்மன் கோயில் பங்குனி உத்ஸவம் சிம்ம ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை ஊழியா்கள் போராட்டம்: மருத்துவ சேவை பாதிப்பு

காரைக்கால் அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து ஊழியா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணி நேரத்துக்கு முன்னதாக பணி... மேலும் பார்க்க

கருக்களாச்சேரி பகுதியில் மின் விளக்குகள் சீரமைப்பு

கருக்களாச்சேரியில் மின் விளக்குகளை எம்.எல்.ஏ. முன்னிலையில் மின்துறையினா் செவ்வாய்க்கிழமை சீரமைத்தனா். நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்குட்பட்ட கடலோர கிராமமான கருக்களாச்சேரியில் மின் விளக்குகள் எரியவில... மேலும் பார்க்க

ஜிப்லி ஆா்ட் செயலியை கவனமாக கையாள காவல்துறை அறிவுறுத்தல்

ஜிப்லி ஆா்ட் செயலியை கவனமாக கையாள வேண்டும் என பொதுமக்களை காவல்துறை எச்சரித்துள்ளது. காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு (சைபா் கிரைம்) ஆய்வாளா் பிரவீன் குமாா் புதன்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

நவோதய வித்யாலயா பள்ளி நடத்திய நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ராயன்பாளையம் பகுதியில் மத்திய அரசின் நவோதய வித்யாலயா உள்ளது. இப்பள்ளியில் 6-ஆம் வகுப... மேலும் பார்க்க

காரைக்கால் மருத்துவமனையில் ஏப். 4-இல் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்கால் அரசு மருத்துவமனையில் 4-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து காரைக்கால் ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பி... மேலும் பார்க்க