செய்திகள் :

எஃப்ஐஎச் புரோ லீக்: கடும் சவாலுக்குபின் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

post image

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஎச்) புரோ ஹாக்கி லீக் மகளிா் தொடரில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை கடும் சவாலுக்குபின் 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.

புரோ ஹாக்கி லீக் தொடா் சனிக்கிழமை புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணியின் முதலிரு கோல்கள் பெனால்டி காா்னா் வாய்ப்பில் கிடைத்தன். 6-ஆவது நிமிஷத்தில் வைஷ்ணவி பால்கே, 25-ஆவது நிமிஷத்தில் தீபிகா ஆகியோா் அற்புதமாக கோலடித்தனா்.

முதல் பாதியிலேயே 12-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்து வீராங்கனை டாா்ஸி அடித்த கோலால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இரண்டாம் பாதியில் 58-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்தின் ஃபியோன அற்புதமாக கோலடித்து 2-2 என சமநிலை ஏற்படச் சென்றாா்

ஆனால் இங்கிலாந்தின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. இந்திய வீராங்கனை நவ்நீத் கெளா் 59-ஆவது நிமிஷத்தில் அற்புதமாக கோலடித்த நிலையில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

இன்றைய ராசிபலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21-02-2025வெள்ளிக்கிழமைமேஷம்:இன்று சூரியன் சுக்கிரன் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியம் பாத... மேலும் பார்க்க

முகை மழை... டூரிஸ்ட் பேமிலி முதல் பாடல் ப்ரோமோ!

நடிகர் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோத்தி, கருடன், நந்தன் திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன.இவர் தற்போது அறிமுக ... மேலும் பார்க்க

திவ்யபாரதியுடன் காதலா... என்ன சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ்?!

ஜி.வி.பிரகாஷும் நடிகை திவ்யபாரதியும் தங்களின் உறவு குறித்து முதல்முறையாக மனம்திறந்துள்ளனர். நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதி கடந்தாண்ட... மேலும் பார்க்க

ஏகே - 64 இயக்குநர் இவரா?

நடிகர் அஜித்தின் அடுத்த பட இயக்குநர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் அஜித் குமார் விடாமுயற்சியைத் தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் வெளியீடுகளுக்காகக் காத்திருக்கிறார்.இதில், விடாமுயற்சி திரைப்... மேலும் பார்க்க