செய்திகள் :

"எங்களுக்கு 5 கடைங்க; ஒரு நாளுக்கு 650 லிட்டர் பால் வியாபாரம்"- அசத்தும் திருப்பத்தூர் சீனு பால் கடை

post image

திருப்பத்தூர் பஜார் தெரு...

காலையில் இருந்து செய்த தீபாவளி ஷாப்பிங் சற்று டயார்ட் ஆக்க, 'ஒரு டீ அடிக்கலாம்' என்று அந்தத் தெருவில் இருந்த 'சீனு பால் கடை'க்குள் நுழைந்தோம்.

ஒரு டீ சொல்லிவிட்டு, அந்தக் கடையின் உரிமையாளர் சுரேஷிடம் பேச்சுகொடுக்க, "1962-ல எங்க அப்பா பால் வியாபாரம் பண்ணத் தொடங்குனாரு.

இப்போ அதை டீக்கடை வியாபாரமா மாத்தி பண்ணிக்கிட்டு இருக்கோம். இப்போ எங்களுக்கு திருப்பத்தூர்ல 5 டீக்கடை இருக்கு. இந்தக் கடைகள்ல அண்ணன் தம்பிங்க பாத்துக்குறோம்" என்று அவர் கூறிக்கொண்டிருக்கும்போதே, சுடச்சுட டீ வந்துவிட்டது.

சுரேஷ் - திருப்பத்தூர் சீனு பால் கடை
சுரேஷ் - திருப்பத்தூர் சீனு பால் கடை

"எங்க வியாபாரத்துல பெரிய பலமே ரெகுலர் கஸ்டமர்கள் தான். இவங்க திரும்ப திரும்ப எங்க கடைக்கு வர்றதுக்கு எங்களோட தரமும், சுவையும் தான்.

எங்க வீட்டுல 7-8 பசு மாடுகள் இருக்கு. அதுகளோட பாலும், அப்புறம் வீட்டுல மாடு வெச்சுறக்கவங்க கிட்ட பால் கறந்து வாங்கிட்டு வந்தும் டீ, காபிக்கு பால் பயன்படுத்தறோம். முழுக்க முழுக்க வீட்டு பசு மாடுகளோட பால் மட்டும் தான் எங்க டீ, காபிக்கு பயன்படுத்தறோம்.

அடுத்தது, டீ தூள், காபி தூள் எல்லாம் ஒரிஜினல் தான் பயன்படுத்தறோம்" என்று தொடர்கிறார்.

"நாங்க எங்க கடைகள்ல சுடு தண்ணீக்கு மட்டும் தான் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோம். மத்தப்படி, டீ, காபிக்கு எல்லாமே விறகு கரி தான்" என்பவரிடம் வியாபாரத்தைப் பற்றி கேட்டோம்.

"ஏற்கெனவே சொன்ன மாதிரி எங்களுக்கு 5 கடைங்க இருக்கு. ஒவ்வொரு கடைக்கும் கிட்டத்தட்ட 120-150 லிட்டர் பால் வியாபாரம் ஆகுது. அப்படி பாத்தா 5 கடைகளுக்கும் சேர்த்து ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 650 லிட்டர் பால்.

நாங்க டீக்கடைக்கு மாறி 30 வருசம் ஆனாலும், இப்போ வரைக்கும் எங்களுக்கு மக்களோட ஆதரவு குறைஞ்சதே இல்ல.

திருப்பத்தூர் சீனு பால் கடை
திருப்பத்தூர் சீனு பால் கடை

புதுசா தொழில் செய்ய நினைக்கிறவங்க சுத்தத்தையும், உண்மையையும் கடைப்பிடிச்சாலே நல்ல வளர்ச்சியைப் பார்க்கலாம்.

அடுத்தது இருக்குற இடம் மற்றும் நம்ம பொருளோட தரத்துக்கு ஏத்த மாதிரி கரெக்டா விலை நிர்ணயிக்கணும்.

அப்புறம் ரொம்ப முக்கியமா, மக்களுக்கு எப்படி கொடுத்தா பிடிக்கணும்ங்கறதை நல்லா தெரிஞ்சுகிட்டு, அதை செய்யுங்க. அதுல தரம் ரொம்ப முக்கியம்" என்று புன்னைகையுடன் விடைக்கொடுக்கிறார்.

மறைந்தார் `இந்திய கிச்சன் கிங்' டி.டி.ஜெகநாதன்; 1959-ல் இந்திய குடும்பங்களுக்கு ஒரு மாற்றம் தந்தவர்!

டி.டி.கே நிறுவனத்தின் முன்னாள் சேர்மனும், பிரபல தொழிலதிபருமான `இந்திய கிச்சன் கிங்' டி.டி. ஜெகநாதன் (77) நேற்று (அக்டோபர் 10) பெங்களூரூவில் உயிரிழந்தார்.இவரின் இழப்பு குறித்து டி.டி.கே குரூப், "அவரின்... மேலும் பார்க்க

GRT: தங்க தீபாவளிக்கு இரட்டிப்பு சந்தோஷம்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் 1964 ஆம் ஆண்டுதொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை, இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அவர்களின், காலத்தால் அழியாத வடிவமைப்புகள், சிறந்த கைவினைத... மேலும் பார்க்க

சென்னை: பூந்தமல்லியில் போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் 7 வது கிளை திறப்பு

போத்தீஸ் குழுமத்தின், அங்கமான போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தனது 7வது கிளையை, சென்னை பூந்தமல்லியில் Oct 5ம் தேதி துவங்கி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் நகை க... மேலும் பார்க்க

பிரின்ஸ் ஜுவல்லரி: பழைய தங்கத்திற்கு புதிய மதிப்பு தரும் Gold Exchange Festival

தென் இந்தியாவின் மிக நம்பகமான நகைக்கடைகளில் ஒன்றான பிரின்ஸ் ஜுவல்லரி, தனது Gold Exchange Festival-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களிடம் இருக்கும் பழைய, பயன்படுத்தப்படாத நகைகள... மேலும் பார்க்க

`டவுசர் கடை' சாப்பாடு: கோலா உருண்டை முதல் மட்டன் சுக்கா வரை; 81 வயதில் அசத்தும் ராஜேந்திரன் தாத்தா

சென்னை மந்தைவெளி டவுசர் கடைஒவ்வொரு நாகரிக சூழலுக்கு ஏற்றவாறு காலந்தோறும் உணவு முறையும் அதன் மீதான மோகமும் மக்களிடையே அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். ஆனால் 1977-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு உணவகம் இன்றும்... மேலும் பார்க்க

`StartUp' சாகசம் 42: "பாலில் கொட்டிக் கிடக்கும் லாப பிசினஸ்" - நம்பிக்கை தரும் `தமிழ் பால்' நிறுவனம்

உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2023-24ம் ஆண்டில் நாட்டின் பால் உற்பத்தி 239.3 மில்லியன் டன்னைத் தாண்டி சாதனை படைத்தது. உலக விநியோகத்தில் சுமார் 25 சதவிகித பங்களிப்பு... மேலும் பார்க்க