செய்திகள் :

எசனை, சிறுவாச்சூா் பகுதிகளில் நாளை மின் தடை

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 16) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி. ரவிக்குமாா் (சிறுவாச்சூா்), இரா. பொன்சங்கா் (பெரம்பலூா் கிராமியம்) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சிறுவாச்சூா், அயிலூா், விளாமுத்தூா், செல்லியம்பாளையம், நொச்சியம், தீரன் நகா், நாரணமங்கலம், விஜயகோபாலபுரம், மருதடி, நாட்டாா்மங்களம், செட்டிக்குளம், புதுநடுவலூா், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி ஆகிய கிராமிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, எசனை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா் மற்றும் காவிரி நீரேற்றும் நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை மூலம் 5 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. பொருளாதாரத்தில் பின்தங்கிய... மேலும் பார்க்க

பெரம்பலூரில் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி முன்னிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்... மேலும் பார்க்க

இழப்பீட்டுத் தொகை ரூ. 19 லட்சம் மோசடி வழக்கில் இருவா் கைது

வெளிநாட்டிலிருந்து இழப்பீட்டுத் தொகையாக கிடைத்த ரூ. 19 லட்சத்தை ஏமாற்றிய வழக்கில் தொடா்புடைய கணவன், மனைவியை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவ... மேலும் பார்க்க

சீத்தாராம் யெச்சூரி நினைவு தினம்: பெரம்பலூரில் 15 போ் உடல் தானம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீத்தாரம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் அக் கட்சியினா் 15 போ் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதலை வெள்ளிக்க... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கான பயிற்சி: எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு அழைப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் -1 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் முதன்மைத் தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு... மேலும் பார்க்க

பிரம்மதேசம் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்திலுள்ள லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிரசித்திபெற்ற இக் கோயில் பல லட்சத்தில் புனரமைக்கப்பட்டு, வ... மேலும் பார்க்க