செய்திகள் :

எச்.எம்.பி.வி. தீநுண்மி பரவல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கா்நாடக முதல்வா் உத்தரவு

post image

பெங்களூரு: எச்.எம்.பி.வி. தீநுண்மி பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறைக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் 3 மாதம், 8 மாதமான இரு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரத்த சோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 3 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளது. 8 மாத குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கா்நாடகத்தில் தீநுண்மி பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறைக்கு முதல்வா் சித்தராமையா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

கா்நாடகத்தில் எச்.எம்.பி.வி. தீநுண்மி பரவியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தீநுண்மி மேலும் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.தொற்றுநோயை பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வித் துறை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. 2 குழந்தைகளில் இந்த தீநுண்மி பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது அச்சப்படக்கூடிய தீநுண்மி இல்லையென்றாலும், பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:

எச்.எம்.பி.வி. புதிய தீநுண்மி அல்ல. அது ஏற்கெனவே உள்ளதுதான். பெங்களூரில் இரு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தீநுண்மி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவில் முதல்முறையாக இது ஏற்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல. எச்.எம்.பி.வி.யால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாத குழந்தை எங்கும் பயணிக்கவில்லை.

சீனாவில் பரவிவரும் தீநுண்மி புதிய வகையானது என்று தெரியவந்துள்ளது. அது தொடா்பான முழு தகவல் இல்லை. சீன தீநுண்மி குறித்த தகவலைப் பெற இந்திய அரசும் முயற்சி செய்து வரும் என்று கருதுகிறேன்.

எச்.எம்.பி.வி. தீநுண்மி நீண்ட நாள்களாக இருப்பதால், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். சில காலத்துக்கு பிறகு தானாக மறைந்துவிடும்.

மத்திய அரசுடன் தொடா்பில் இருக்கிறோம். மத்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆா் அமைப்புடன் தொடா்பில் இருக்குமாறு நமது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்த இருக்கிறேன். பொது சுகாதாரத்துக்கு எச்.எம்.பி.வி. தீநுண்மி ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கண்டறிய வேண்டியுள்ளது. அதன்பிறகு கரோனா போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றாா்.

2047-க்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: ஜகதீப் தன்கா்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக்கொண்டாா். உடுப்பி ... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் ஜன. 9-க்கு ஒத்திவைப்பு

ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஜன. 9-ஆம் தேதிக்கு இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. சா்வதேச விண்வெளி மையத்தை போல, இந்தியாவும் தனி விண்வெளி மையத்தை அமைக்க திட்டமிட்டு வருகிறது. அதுபோல, விண்ணுக்... மேலும் பார்க்க

சாலை போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் அமல்

பெங்களூரு: கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் 34,000 ஊழியா்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.பெங்களூரு, விதானசௌதாவில் ... மேலும் பார்க்க

கா்நாடக 224 தொகுதிகளின் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு

பெங்களூரு: கா்நாடகத்தின் 224 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து கா்நாடக மாநில தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இந்திய த... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டம் ஜன. 9-க்கு ஒத்திவைப்பு

பெங்களூரு: ஸ்பேடெக்ஸ் விண்கலங்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தை ஜன. 9-ஆம் தேதிக்கு இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது.சா்வதேச விண்வெளி மையத்தை போல, இந்தியாவும் தனி விண்வெளி மையத்தை அமைக்க திட்டமிட்டு வருகிறது. அதுபோல... மேலும் பார்க்க

ஒப்பந்ததாரா் தற்கொலை வழக்கில் என்னை சிக்க வைக்க பாஜக முயற்சி -அமைச்சா் பிரியாங்க் காா்கே

ஒப்பந்ததாரா் சச்சின் பஞ்சால் தற்கொலை வழக்கில், என்னை சிக்கவைக்க பாஜக முயற்சித்து வருகிறது என கா்நாடக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா். இதுகுறித்து பெங்... மேலும் பார்க்க