செய்திகள் :

எச்-1பி, எல்-1 விசா வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்! இந்தியர்களுக்கு பாதிப்பு!

post image

எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சிக்கு முன்பு, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி, எல்-1 விசாக்களின் காலம் நிறைவடைந்தால் 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதையடுத்து புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 540 நாள்களாக அதிகரித்து பைடன் அரசு பொறுப்பேற்ற பிறகு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், ஜோ பைடனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ஜான் கென்னடி மற்றும் ரிக் ஸ்காட் ஆகியோர் மறுஆய்வுச் சட்டத்தின் கீழ் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

”பைடன் அரசின் 540 நாள்கள் கால நீட்டிப்பு ஆபத்தான முடிவு. இதனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்காணிப்பது காவல்துறைக்கு சவாலானதாக மாறிவிடும்.

நமது குடியேற்றச் சட்டங்களை செயல்படுத்துவதற்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காகவும் பைடன் அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று தீர்மானத்தில் ஜான் கென்னடி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : அமெரிக்க விமானத்தில் வரும் இந்தியர்களின் குற்றப் பின்னணியை சரிபார்க்கும் என்ஐஏ!

எச்-1பி, எல்-1 விசா என்றால் என்ன?

எச்-1பி விசா: தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் நிதி போன்ற சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்த அமெரிக்க நிறுவனங்களை அனுமதிக்கிறது.

எச்-4 விசா: எச்-1பி விசா வைத்திருப்பவர்களின் இணையர் மற்றும் அவர்களின் 21 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு வழங்கப்படுகிறது.

எல்-1 விசா: பன்னாட்டு நிறுவனங்களின் வெளிநாடுகளில் உள்ள தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களை அமெரிக்காவில் உள்ள கிளைக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கிறது.

எல்-2 விசா: எல்-1 விசா வைத்திருப்பவர்களை சார்ந்திருப்பவர்கள் இந்த விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியவும், படிக்கவும் அனுமதிக்கிறது.

இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?

2023 தரவுகளின்படி, இந்தியாவைச் சேர்ந்த 76,671 பேர் எல்-1 விசாவும், 83,277 பேர் எல்-2 விசாவும் வைத்துள்ளனர். அதேபோல், அமெரிக்காவால் வழங்கப்பட்டுள்ள மொத்த எச்-1பி விசாக்களின் 71 சதவிகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாக்களில் அமெரிக்கா செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கெனவே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசாங்க முடிவுகளை எடுக்கும் அதிகாரம் எலான் மஸ்க்கிற்கு இல்லை: வெள்ளை மாளிகை

எலான் மஸ்க் அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையின் ஊழியர் இல்லை என்றும் அரசாங்க முடிவுகளை எடுக்கும் முறையான அதிகாரம் அவருக்கும் இல்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட... மேலும் பார்க்க

வரிவிதிப்பில் புதிய மாற்றங்களை அறிவித்த டிரம்ப்!

அமெரிக்க பொருள்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் வரியே அந்தந்த நாடுகளுக்கு விதிக்கும் வகையிலான வரித் திருத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்துள்ளார். மானியங்கள், வாட் போன்றவற்றில் நியாயமற... மேலும் பார்க்க

உக்ரைனில் விரைவில் போர் நிறுத்தம்! பிரான்ஸ் வலியுறுத்தல்

உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு வெகுவிரைவில் முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஐரோப்பிய அவசரநிலை மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன் அமெரிக்க அதிபர் ட... மேலும் பார்க்க

வாஷிங்டனில் டிரம்ப், எலானுக்கு எதிராகப் போராட்டம்!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்று ஒரு மாதமாகும் நிலையில், அவருக்கு எதிராக வாஷிங்டனில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.மேலும், அரசுத் துறைகளில் தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு அளிக்கப்படும... மேலும் பார்க்க

பொய் சொன்னதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம்!

சிங்கப்பூரில் பொய் சாட்சி கூறிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி எதிர்க்கட்சித் தலைவர... மேலும் பார்க்க

பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ.நா. மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் அறிவுறுத்தல்!

டெல் அவிவ் : பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகமை(யு.என்.ஆர்.டபில்யூ.ஏ... மேலும் பார்க்க