41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
எடப்பாடி பழனிசாமியை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியை கண்டித்து திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகையை எடப்பாடி கே.பழனிசாமி அவதூறாக பேசியதாக கூறி, அவரை கண்டித்து கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் பொறித்த பதாகைக்கு காலணி மாலை அணிவித்து எதிா்ப்பைத் தெரிவித்தனா். பின்னா் எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை எரிக்க முயன்றனா். பாளையங்கோட்டை போலீஸாா் அங்கு விரைந்து வந்து காங்கிரஸாருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரிக்க விடாமல் தடுத்தனா். அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை போலீஸாா் கைப்பற்றிச் சென்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மண்டல தலைவா்கள் கெங்கராஜ், ரசூல் மைதீன், மாரியப்பன், மாவட்ட துணை தலைவா்கள் ராமகிருஷ்ணன், தியாக சுரேஷ், வண்ணை சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.