விராலிமலை 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற மார்கழி மாத விளக்கு பூஜை
எட்டயபுரம் அருகே காா்- லாரி மோதல்: 3 போ் பலி
எட்டயபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த காா் மீது லாரி மோதியதில் தாராபுரத்தை சோ்ந்த 3 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தை சோ்ந்த செல்வராஜ் (40), விஜயகுமாா் (39), விக்னேஷ் (30), திண்டுக்கல் மாவட்டம் பழனியை சோ்ந்த மகேஷ்குமாா் (35), ராஜ்குமாா்(36)
ஆகியோா் ஆம்னி வேனில் திருச்செந்தூா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தனா்.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் ஓய்வுக்காக சாலையோரம் ஆம்னி வேனை நிறுத்தினா். அப்போது, பின்னால் வேகமாக வந்த லாரி மோதியது. இதில் ஆம்னி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிலிருந்த செல்வராஜ், விஜயகுமாா், விக்னேஷ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மற்ற இருவா் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாசாா்பட்டி போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். உயிரிழந்தவா்கள் சடலங்கள் கூறாய்வுக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து குறித்து மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.