செய்திகள் :

எண்ணெய் சருமமா? இதையெல்லாம் செய்யாதீர்கள்!

post image

சருமப் பிரச்னைகள் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கக்கூடியதுதான். சிலருக்கு முகம் எப்போதும் எண்ணெய் வழிந்தாற்போலவே இருக்கும். அவர்களுக்கு ஆயில் சருமம் அல்லது எண்ணெய்ப் பசை சருமம் என்று கூறுகிறோம்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள் மிகவும் கவனமாக தங்கள் சருமத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது?

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு அதிகமாக ஸ்க்ரப் செய்யவோ அல்லது பீலிங்(eeling) பேக் போடவோ கூடாது. இதனால் அதிக எண்ணெய்யை சரும செல்கள் வெளியேற்றும். அதனால் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே ஸ்க்ரப் அல்லது பீலிங் பேக் போட வேண்டும்.

சருமத்தில் எண்ணெய் பசை இல்லாமல் இருக்க நாள் ஒன்றுக்கு இருமுறை கழுவ வேண்டும். ஆல்கஹால் அல்லாத சருமத்தை சுத்தம் செய்யக்கூடிய பேஸ்வாஷை பயன்படுத்தலாம். இதனால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

மிகவும் கடினமான அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. இது எண்ணெய் சருமத்தை மேலும் பாதிக்கும். அதிக ரசாயனங்கள், செயற்கை வாசனைத் திரவியங்கள் நிறைந்த அழகு சம்பந்தப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

அதிக ரசாயனங்கள் கலக்காத டோனர்ஸ்களை பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள எண்ணெய்யைக் குறைக்கும்.

கடினமாக உள்ள மாய்சரைஸர்களைத் தவிர்த்து இலகுவாக உள்ள க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தமாக சருமத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கக் கூடாது.

கோடையில் வெயிலில் இருந்து தப்பிக்க சன்ஸ்க்ரீன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். எண்ணெய் கலக்காத சன்ஸ்க்ரீன்களைபயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். இது கையில் இருந்து பாக்டீரியா, அழுக்கு ஆகியவற்றை சருமத்திற்கு கடத்தும். இதனால் எண்ணெய் சருமம் மேலும் பாதிக்கப்படும். முகத்தை தொட வேண்டிய அவசியம் வரும்போது கைகளை கழுவிவிட்டு தொடலாம்.

தோல் நிபுணரின் அறிவுரைப்படி அழகு சாதன தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

இதையும் படிக்க |குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? உடல் பருமன் ஏன்? காரணமும் தீர்வும்!

மமிதா பைஜூ பிறந்தநாளில் புதிய பட போஸ்டர்!

நடிகை மமிதா பைஜூ பிறந்தநாளில் டூட் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரேமலு படத்தின் மூலம் பிரபலமானவர் மலையாள நடிகை மமிதா பைஜூ. பின்னர், ரெபல் எனும் தமிழ்ப் படத்தில் நடித்திருந்தார். விஜய்யின் ஜனநாயன... மேலும் பார்க்க

ஜன நாயகன் புதிய போஸ்டர்! இயக்குநர் வினோத்தா? அட்லியா?

நடிகர் விஜய் நடிக்கும் ஜன நாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் விடியோ நள்ளிரவு 12 மணியளவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது... மேலும் பார்க்க

குபேரா முதல்நாள் வசூல் எவ்வளவு? குழப்பும் படக்குழு!

குபேரா படத்தின் முதல்நாள் வசூல் குறித்து படக்குழு கூறியது ரசிகர்களிடையே குழப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தின் முதல்நாள் வசூல் இந்திய அளவில் ரூ.13 கோடி என தகவல் வெளிய... மேலும் பார்க்க

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸி..! தாய் நெகிழ்ச்சி!

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நிறைவேற்றிய மெஸ்ஸியின் செயலால் கால்பந்து உலகம் நெகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது. ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (37) தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளை... மேலும் பார்க்க

துப்பாக்கி கைமாறாது! ஜனநாயகன் பிறந்தநாள்!

வெற்றி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகுக்கு வெற்றிப் படங்களை அள்ளிக் கொடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவராகவும் வலம் வரும் விஜய், தனது 51-ஆவது வயதைத... மேலும் பார்க்க

இறுதிச் சுற்றில் மாா்கெட்டா - வாங் ஸின்யு சபலென்கா அதிா்ச்சித் தோல்வி

பொ்லின் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை பெலாரஸின் அரினா சபலென்கா அதிா்ச்சித் தோல்வி கண்டாா். ஜொ்மன் தலைநகா் பொ்லினில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் அரையிறுத... மேலும் பார்க்க