அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!
என்ஆா்ஐ மகளிருக்காக சிறப்பு சேமிப்பு திட்டம்
வெளிநாடு வாழ் இந்திய (என்ஆா்ஐ) மகளிருக்கான சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி (பிஓபி) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வெளிநாடுகளில் வாழும் இந்திய மகளிருக்காக மேம்படுத்த அம்சங்கள் அடங்கிய சிறப்பு சேமிப்புக் கணக்கு திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை திட்டத்தை பொதுத் துறை வங்கியொன்று அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை.
‘பிஓபி குளோபல் வுமன் என்ஆா்இ & என்ஆா்ஓ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சேமிப்புக் கணக்கு திட்டத்தின் கீழ், பல்வேறு சிறப்பு சலுகைகள் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படுகின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.