விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: அமைச்சா் அன்பில் மகேஷ்
என்மீது ஏன் இவ்வளவு அன்பு? விடியோ வெளியிட்ட இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜா தன் பாராட்டு விழா குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்.13) பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று இசையமைப்பாளர் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வணக்கம், தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் அதீத மனநெகிழ்வால் எனக்கு சரியாக பேச்சு வரவில்லை. ஒரு பாராட்டு விழாவை ஓர் அரசு இவ்வளவு முனைப்புடன் நடத்தியது நம்ப முடியாததால் ஆனந்தத்தில் நிறைய விஷயங்களைப் பேச முடியவில்லை. என் மீது ஏன் இவ்வளவு வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. நான் உருவாக்கிய இசையாக இருக்கலாம்.
ஆனால், இந்த சிம்பொனி இசையின் முக்கியத்துவத்தை அறிந்த தமிழக முதல்வர், உலக சாதனையைச் செய்த தமிழனைத் தமிழக அரசு பாராட்டுவது கடமை என நினைத்திருக்கிறார். முதல்வர் என்னிடம் சங்க இலக்கிய நூல்களுக்கு இசையமைக்க வேண்டும் வேண்டுகோள் வைத்தார். நிச்சயம், அந்த வேண்டுகோளை நிறைவேற்றுவேன்.
நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் வந்தது விழாவுக்கு மகுடம் சேர்த்ததுப்போல் இருந்தது. பலரும் என் சிம்பொனி இசையைக் கேட்டது மகிழ்ச்சி. ஆனால், சிம்பொனி எப்படியிருந்தது என யாரும் பேசாதது சிறிய வருத்ததைக் கொடுத்தாலும் முழு நிகழ்வும் நிறைவாக இருந்தது. மக்களுக்காக மீண்டும் இதே சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தவுள்ளேன். எப்போது என விரைவில் அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சிம்பொனி உருவாகக் காரணம் யார்? இளையராஜா நன்றி!