இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
``என் வாரிசுகளுக்கு 1% மட்டுமே சொத்தில் பங்கு, மீதி பிறருக்கு..'' - பில் கேட்ஸ்
பில்கேட்ஸ் உலக பணக்காரர்களில் ஒருவர். இவரது சொத்து மதிப்பு 155 பில்லியன் டாலர்கள் ஆகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸுக்கு ரோரி ஜான் கேட்ஸ் என்ற மகனும், ஜெனிஃபர் கேட்ஸ் நாசர் மற்றும் புரோ கெட்ஸ் என்ற மகள்களும் உள்ளனர்.

பில்கேட்ஸ் தனது பிள்ளைகளுக்கு வழங்க உள்ள சொத்துகள் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "என் குழந்தைகள் தங்களது வாழ்வில் தானாகவே முன்னேறி வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறேன். அதனால், என்னுடைய மொத்த சொத்து மதிப்பில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகத் தான் அவர்களுக்கு சொத்து வழங்க உள்ளேன்.
என் குழந்தைகளை நன்றாக வளர்த்தது மட்டுமின்றி, நல்ல கல்வியையும் தந்திருக்கிறேன். அவர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் சொந்த வருமானத்தில் உழைத்து வெற்றி பெற ஒரு வாய்ப்பினை மட்டும் உருவாக்கி தர விரும்புகிறேன்.
எனக்கு இந்த 69 ஆண்டுக்காலத்தில் கிடைத்த பல அதிர்ஷ்டங்கள், என் குழந்தைகளின் தனி சிறப்பினை மறைக்கக்கூடும். அவர்கள் தானாக தனித்தன்மையோடு ஜொலிக்க வேண்டும்.
அவர்கள் ஒருபோதும் என்னுடைய அன்பையும், ஆதரவையும் குழப்பி கொள்வதை நான் விரும்பவில்லை.
ஒரு சதவிகிதம் போக மீதி சொத்துகளை என்னுடைய அறக்கட்டளை மூலம் தேவைப்படுபவர்களுக்கு உதவ பயன்படுத்த விரும்புகிறேன்" என்று பேசியுள்ளார்.
பில்கேட்ஸின் வாரிசுகள் அவரது சொத்து மதிப்பில் வெறும் ஒரு சதவிகிதத்தை பெற்றாலே, அவர்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
