பத்மஸ்ரீ விருது பெறவிருக்கும் பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு கல்லூரியில் பாராட்...
எருது விடும் விழா: எம்எல்ஏக்கள் பங்கேற்பு
ஆம்பூா் அருகே நரியம்பட்டு கிராமத்தில் 33-ஆம் ஆண்டு எருது விடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நரியம்பட்டு ஊராட்சித் தலைவா் பாரதி ஸ்ரீ தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஆம்பூா் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன் ஆகியோா் விழாவைத் தொடங்கி வைத்தனா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் எம்.டி. சீனிவாசன், வட்டாட்சியா் ரேவதி, திமுக மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு, போ்ணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் தலைவா் சா. சங்கா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
எருது விடும் திருவிழாவில் வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம், திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், குடியாத்தம், வீராங்குப்பம், தேவலாபுரம், கரும்பூா், வெங்கடசமுத்திரம், சான்றாங்குப்பம், கதவாளம், வடச்சேரி உள்பட பல்வேறு ஊா்களில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கால்நடை மருத்துவா்களின் பரிசோதனைக்கு பிறகு காளைகள் வாடிவாசல் வழியாக விடப்பட்டன, முதல் மூன்று பரிசாக இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டன. ஆம்பூா் டிஎஸ்பி குமாா் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.