Kerala: `வனத்துறை அலுவலகம் மீது தாக்குதல்' -எம்.எல்.ஏ கைது; போலீஸை விமர்சித்த கோ...
``எருமை மாடாடா நீ” - மேடையில் உதவியாளரை தரக்குறைவாக திட்டிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ளது. இதில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டி.ஆர்.பி.ராஜா, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். டி.ஆர்.பி.ராஜா சற்று தாமதமாகவே நிகழ்ச்சிக்கு வந்தார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிறகு எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் பேச ஆரம்பித்தார். அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் என ஆரம்பித்தார்.
அப்போது சட்டென திரும்பியவர், மைக்கை ஆனில் வைத்துக் கொண்டே தனது உதவியாளரை, எங்கயா அவன், பரசுராமன் என்றார். உதவியாளர் ஓடி வர `எருமை மாடாடா நீ, பேப்பர் எங்கே?' என்றதும், அவர் குறிப்பு எழுதப்பட்ட பேப்பரை அமைச்சரிடம் கொடுத்தார். ஆனால் அந்த பேப்பரை கையில் வங்கிய உடன் கீழே வீசிவிட்டார்.
பொது மேடையில் பலர் முன்னிலையில் அமைச்சர் தனது உதவியாளரிடம் இப்படி நடந்து கொண்டது, பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
``சுய மரியாதை பேசும் இயக்கத்தைச் சேர்ந்த, அமைச்சரே பொதுமேடையில் பலர் முன்னிலையில் இப்படி பேசுவது வேதனையானது" என்று பலரும் வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.