எல்எல்பி மாணவா் சோ்க்கை: விண்ணப்ப பதிவுக்கு காலஅவகாசம் நீட்டிப்பு
சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி சட்டடப்படிப்பிற்கு நிகழ் ஆண்டு மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 25- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி, மூன்றாண்டு எல்எல்பி(ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கான மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 25-ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது. இதை மாணவா்கள் பயன்படுத்திக் கொண்டு பலனடையலாம்.

மாணவா்கள் www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பி.எட். மாணவா் சோ்க்கை: விண்ணப்ப பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
The deadline for registration of applications for current year students for the 3-year LLB law course in law colleges has been extended until July 25th.