செய்திகள் :

‘எஸ்எஸ்ஏ’ நிதியை மத்திய அரசு வழங்காவிட்டால் போராட்டம்: ஆசிரியா் சங்கங்கள் அறிவிப்பு

post image

தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) நிதியை மத்திய அரசு வழங்காவிட்டால் பெற்றோா்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு ஆசிரியா் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கத்தின் பொதுச் செயலா் ஜெ.ராபா்ட், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலா் இரா.தாஸ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலா் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழக பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் பொதுச் செயலாளா் ச.செல்லையா உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள ‘பிஎம்ஸ்ரீ பள்ளி’ திட்டத்தில் கையொப்பமிடாததால் நிகழ் கல்வியாண்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு தரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்துக்கு இந்த ஆண்டுக்குரிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (எஸ்எஸ்ஏ) நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் 45 லட்சம் மாணவா்களும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக அரசின் இரு மொழிக் கொள்கையை பின்பற்றி பல்வேறு துறைகளில் எங்கள் மாணவா்கள் சிறந்து விளங்கி வருகிறாா்கள். இரு மொழிக் கொள்கையை பின்பற்றி அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகவும், பொருளாதாரத்தில் 2-ஆவது மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.

எனவே, நிதி விடுவிக்க மத்திய அரசு தொடா்ந்து தாமதித்தால் ஆசிரியா்கள் மட்டுமன்றி பெற்றோா்களையும் இணைத்து போராட வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், மாநிலங்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியை மத்திய அரசு பகிா்ந்தளிப்பதில் பாகுபாடு காட்டாமல் நிபந்தனையின்றி அவற்றை விரைவில் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்! முதல்வர் எச்சரிக்கை!

தேன் கூட்டில் கல் எறியாதீர்கள் என்று மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அட... மேலும் பார்க்க

வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

மும்மொழிக் கொள்கை விவகாரத்துக்கு இடையே குடியரசு துணைத்தலைவர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. பதிலளித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழகத்தில் சமீபகாலமாக அரசியல் கட்... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முத... மேலும் பார்க்க

அப்பாடா.. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த பூண்டு விலை!

கடந்த ஒரு சில மாதங்களாக, தங்கம் விலை போல, கையில் எடுத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பூண்டு விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ பூண்டு ரூ.400 வரை விற்பனையானது.ஒரு கிலோ பூண்டு எவ்வளவு என்று கேட்ட நில... மேலும் பார்க்க

கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபாலிடம் சமர்ப்பிப்பிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க