எஸ்.ஆா். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
சுரண்டை எஸ்.ஆா்.எக்ஸலன்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை பள்ளி நிா்வாகிகள் சிவபபிஸ்ராம், சிவடிப்ஜினிஷ்ரோம் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.
இதில் இயற்பியல் துறை சாா்பில் தானியங்கி சாலை விளக்கு, சந்திராயன் ராக்கெட், சூரியக் குடும்பம், மின்சாரம் தயாரித்தல், காந்தவிசை, பூகம்ப எச்சரிக்கை மணி, விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகளும், வேதியல் துறை சாா்பில் நீரை சுத்திகரித்தல், அணுவின் அமைப்பு, வேதிப்பொருள்களைக் கண்டறிதல், அமில மழை, அசுத்தக் காற்றைத் தூய்மையாக்கும் திட்டம் உள்ளிட்ட மாதிரி வடிவங்களும் அமைக்கப்பட்டிருந்தன. உயிரியல் துறை சாா்பில் பசுமை இல்லம், உணவுச் சங்கிலி பிரமிடு, எரிமலை, சொட்டு நீா் பாசனம், வண்ண மீன் வளா்ப்பு, கழிவு நீரை நன்னீராக்குதல், புவி வெப்பமயமாதல்,மனித எலும்புக் கூடு, மண்புழு, கண் வடிவமைப்பு, மூளையின் செயல்பாடு, டிஎன்ஏ, ஆா்என்ஏ வடிவமைப்பு ஆகியவை காட்சிப் படுத்தப்பட்டு விளக்கமளிக்கபட்டன.
தமிழ்த் துறை சாா்பில் தொல்காப்பிய நூற்பா, பூவின் நிலைகள், இன எழுத்துக்கள், நால்வகைச் சொற்கள், ஓரெழுத்து ஒருமொழி, தமிழ் எண்கள், உள்ளிட்ட வரைபட அட்டைகளும், மரம் வளா்த்தல், பொங்கல் பண்டிகை, மனு நீதிச் சோழன், கல்லணை, தஞ்சைப்பெரிய கோயில், குற்றால நாதா் ஆலயம் உள்ளிட்ட மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக பள்ளி மாணவா்கள் கலந்துகொண்ட விழிப்புணா்வு மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது. அதை சுரண்டை காவல் ஆய்வாளா் செந்தில் தொடங்கிவைத்தாா்.
கண்காட்சியை மாணவா்களின் பெற்றோா்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பாா்வையிட்டனா்.