செய்திகள் :

எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் புதிய படம்: ரசிகர்கள் மகிழ்ச்சி!

post image

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கில்லர் எனும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடிகராக மிரட்டிவரும் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குராக களமிறங்கியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக 2015-இல் இசை எனும் படத்தை இயக்கியிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கில்லர் எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் கோபாலன், ஏஞ்சல் ஸ்டீடியோஸ் எஸ்.ஜே.சூர்யா சார்பில் இந்தப் படம் தயாரிகிறது.

பான் இந்திய படமாக உருவாகும் இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது:

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா வந்துவிட்டார். இது எனது கனவு திரைப்படம். புகழ்பெற்ற கோகுலம் கோபாலன் சாருடன் இணைந்தது மகிழ்ச்சி. ரசிகர்களாகிய உங்களது அன்பும் ஆசிர்வாதமும் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

கடைசியாக எஸ்.ஜே.சூர்யா நடித்த ராயன், சரிபோதா சனிவாரம், வீர தீர சூரன் -2 என அனைத்துமே ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

summary

A new film titled Killer has been announced, directed by director S.J. Suryah. neary a decade he directed a film.

தீபாவளிக்கு வெளியாகும் லெஜண்ட் சரவணனின் புதிய படம்!

பிரபல தொழிலதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையின்போது திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.லெஜண்ட் சரவணன், கதாநாயகனாக அறிமுகமான “தி லெஜண்ட்” என... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகை நடித்ததால் தடைசெய்யப்பட்ட பஞ்சாபி திரைப்படம்? படக்குழுவுக்கு 40% இழப்பு!

பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமிர் நடித்ததால் பஞ்சாபி சர்தார் ஜி 3 என்ற திரைப்படம் இந்தியாவில் வெளியாகாமல் வெளிநாட்டில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது. அமர் ஹுண்டல் இயக்கிய இந்தப் படத்தில் பஞ்சாபி நடிகர் தில்ஜ... மேலும் பார்க்க

கோலிவுட் சூப்பர்ஸ்டாருடன்.. நடிகர் விஜயுடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை சிங்கப்பூரின் உயர் ஆணையர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.இந்தியாவில் சிங்கப்பூருக்கான தூதர் சைமன் வோங் மற்றும் சென்னையில் ... மேலும் பார்க்க

சித்தர் வழி, ரசாயன ஊசி... விஜய் ஆண்டனியின் மார்கன் - திரை விமர்சனம்!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான மார்கன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் ஒரு இளம்பெண் வித்தியாசமான முறையில் வில்லனால் கொல்லப்படுகிறார். வித்தியாசம் என்றால், ஒரு ஊசியை ... மேலும் பார்க்க

‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!

மலையாள திரையுலகின் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த பிரபலங்கள், மத்திய தணிக்கை வாரியத்தின் அலுவலகம் முன்பு வரும் ஜூன் 30 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகரும், மக்களவை உற... மேலும் பார்க்க

ஓடிடியில் மாமன் எப்போது?

நடிகர் சூரியின் நடிப்பில் வெளியான மாமன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்... மேலும் பார்க்க