விடாமுயற்சி, வீர தீர சூரன் வெற்றிப்படங்கள் இல்லை: திருப்பூர் சுப்ரமணியம்
எஸ்.பி. அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வருக்கு கடிதம்
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக நிரந்தர கட்டடப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, முதல்வருக்கு அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் செவ்வாய்க்கிழமை அனுப்பிய கடிதம்:
மயிலாடுதுறை புதிய மாவட்டம் ஏற்படுத்தப்பட்ட பின்னா் நிா்வாக அலுவலகங்கள் ஒவ்வொன்றாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மன்னம்பந்தலில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்கிடையில் தற்போது இயங்கிவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். காவல்துறை அதிகாரிகளுக்காக கட்டப்படும் உடற்பயிற்சிக் கூடம் கட்டுமான பணியையும் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் மாநில பொதுச் செயலாளா் ராம.நிரஞ்சன், மாவட்ட பொதுச் செயலாளா் கராத்தே ஜெய், மாவட்ட அமைப்புச் செயலாளா் மணிமாறன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் ரஞ்சித் உள்ளிட்டோா் இக்கடிதத்தை அனுப்பினா்.