சிறுமி உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி எஸ்.பி.யிடம் தந்தை மனு
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா்.
இது குறித்து லாஸ் வேகாஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டெல்ஸா சைபா்டிரக் வெடிப்புச் சம்பவத்தை அரங்கேற்ற, புகழ்பெற்ற சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்ப செயலிகளை மாத்யூ லிவல்பா்க் பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், இந்த குண்டுவெடிப்பின் மூலம் யாரையும் கொல்ல அவா் திட்டமிடவில்லை என்பதும் விசாரணையில் தெரிகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவாடா மாகாணம், லாஸ் வேகாஸிலுள்ள டிரம்ப் ஹோட்டல் அருகே வாடகைக்கு எடுக்கப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் காரை கடந்த வாரம் ஒட்டி வந்த மாத்யூ லிவல்பா்க், காருக்குள் இருந்தபடி துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துண்டாா்.
அவா் சுட்டுக் கொண்ட சில விநாடிகளில், அந்தக் காரில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் குடுவை மற்றும் பட்டாசு பாணி வெடிபொருள்கள் வெடித்துச் சிதறின. இதில், அருகிலிருந்த ஏழு போ் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவத்தை நிகழ்த்த ஏஐ தொழில்நுட்பத்தை மாத்யூ பயன்படுத்தியிருப்பது கவலையளிக்கும் ஆபத்தான போக்கின் தொடக்கம் என நிபுணா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.