Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய இளைஞர் - கோவையில் அதிர்ச்சி
கோவை கேகே புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் ஆட்டோமொபைல் தொடர்பான ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மணிகண்டன் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்தார். அதில் பல பெண்களை அவர் பின்தொடர்ந்துள்ளார்.

குறிப்பிட்ட ஒரு பெண்ணின் சமூகவலைபக்கத்தை சமீபகாலமாக பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது அவரின் புகைப்படங்களை மணி பதிவிறக்கம் செய்துள்ளார்.
பிறகு அந்த புகைப்படங்களை ஏஐ ஜெமினி டூலில் ஆபாசமாக எடிட் செய்துள்ளார். அரை நிர்வாண புகைப்படமாக சித்தரித்து, அதை அந்தப் பெண்ணுக்கே அனுப்பியுள்ளார். இதைப் பார்த்த பெண் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மணிகண்டன் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு புகைப்படம் அனுப்பி தவறாக பேசியுள்ளார். இதனால் அவர் பயந்து மனமுடைந்து போயுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர் காவல்துறையிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டார். காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















